Tamil - WEBSITE X5 12.0.6.24 - ART AND PHILOSOPHY OF PEACE FRONTEVERSISMO by Giuseppe Siniscalchi

Go to content

Main menu:

Tamil

India
"Fronteversismo" என்பது கலை மற்றும் அமைதியின் தத்துவம் ஆகும், இது 2014 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் கியூசெப் சினிஸ்கால்ச்சியின் (Giuseppe Siniscalchi) குழந்தைப் பருவப் படைப்புகளின் உள்ளுணர்வு மற்றும் கண்டுபிடிப்பிலிருந்து சுமார் 50 வருட ஓவியப் பயிற்சி மற்றும் 35 ஆண்டுகளுக்கும் மேலான தடயவியல் பணிக்குகப் பிறகு பிறந்தது.
சுருக்கமாக, இது தோற்றத்தின் மீதான இருப்பை, அர்த்ததை மதிப்பிடுவதாகும்: கலை, தத்துவம், வெளியீடு போன்ற பல துறைகளில் உள்ள முன்னேற்றங்கள் மற்றும் இணைப்புகள் (சகோதரர் சார்லஸ் அல்போன்ஸ் மற்றும் பிறர் பவுலின் பதிப்புகள்),  ஒருங்கிணைந்த நம்பிக்கை போன்ற பல மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்பட்ட புத்தகங்களின் அட்டைகளில் ஃபிரான்டெவர்சிஸ்மோவின் படைப்புகளின் படங்கள்அச்சிடபட்டுள்ளன.
ஃபிரான்டெவர்சிஸ்மோ அறிவியல், கலை சிகிச்சை, உளவியல், நரம்பியல், மன-உடல் நலம், நடனம், யோகா, ஃபேஷன், இசை, காஸ்ட்ரோனமி, சூழலியல் மற்றும் ஆன்மீகம் உள்ளடக்கிய செய்திகள் கொண்டது. அமைதிப் பள்ளிக் கல்வியின் திசையில் பன்முகத்தன்மைக்கு இடையே முறையே தொடங்கி, இது பல துறைகளிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள உத்வேகத்தை உள்ளடக்கியது, இதன் சிந்தனை நேர்மறை நம்பிக்கை, மற்றும் மனிதகுலத்தின் அடையாளத்திற்கான நேர்மறையான தோற்றம் இதற்கு ஊக்கமளிக்கும் பங்களிப்பாகவும் எதிர்கால சந்ததியினருக்கும் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளாகும். பொருளாதாரம் மற்றும் நல்லெண்ணம் கொண்ட பல படைப்பாற்றல் நபர்களுக்கு இந்த சிந்தனை உதவுகிறது. ஒவ்வொரு யதார்த்தத்தையும் ஆழமாகப் பார்க்க இது மக்களுக்கு உதவுகிறது. ஏனெனில் ஒவ்வொரு யதார்த்தமும் முன் மற்றும் பின் என்று இரு பக்கங்களைக் கொண்டிருப்பதால் Fronteversismo படங்களும் இரண்டு பக்கங்களை கொண்டு உள்ளன. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பின்னால் உள்ள உண்மையான அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள, விவேகமான கண்கள் மற்றும் இதயத்துடன் அப்பால் தொலை நோக்கில் பார்க்க நம்மை இது ஊக்குவிக்கும்.
"Fronteversismo முறை" என்பது ஒரு புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய கலை அணுகுமுறையாகும், இது டராண்டோ பினாகோடெகா அருங்காட்சியகம், எஸ். எஜிடியோ முடிமா கத்தோலிக்க அருங்காட்சியகம், அல்டமுரா அருங்காட்சியகம், மாடெராவின் கற்கள் பற்றிய கதைகள், ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் பெங்களூரில் உள்ள மான்ட்ஃபோர்ட் கல்லூரி, அனுகிரஹா கல்லூரி. திண்டுக்கல், தமிழ்நாடு மற்றும் திருநெல்வேலியில் லிஃபுசா மையம் இதன் சிந்தனைகளை பிறதிபலிக்கின்றன. கடந்த கோடையில், ஆசிரியர்கள் மற்றும் உளவியல் மற்றும் பிற துறைகளின் மாணவர்களுக்கு வியக்கத்தக்க மற்றும் ஈர்க்கக்கூடிய முடிவுகளைக் கொண்ட அமர்வுகளை Giuseppe Siniscalchi நடத்தினார். அவர்கள் சில மணிநேரங்களில், கியூசெப்பின் வழிகாட்டுதலுடன் குழுக்களாகப் பணியாற்றி, காகிதங்களில் சீரற்ற இடங்களிலிருந்து மனிதகுலத்தை ஊக்குவிக்கும் செய்தியுடன் அற்புதமான படைப்புகளை உருவாக்கினர். மேலும் தூக்கி எறியப்பட்ட பொருட்களையும்  கருத்துள்ள படங்கள் வரைய பயன்படுத்துகின்றனர்.
சில படைப்புகள் இந்தியாவில் மேஸ்ட்ரோ சினிஸ்கால்ச்சியால் உருவாக்கப்பட்டன, அவை தற்போது அருங்காட்சியகம் மற்றும் ஃபிரான்டெவர்சிசம் பள்ளியில் அமைக்கப்பட்டு வருகின்றன, இது தமிழ்நாட்டில் உள்ள அனுகிரஹா கல்லூரியின் உள்ளே அமைந்துள்ள ஒரு சிறப்பு இடத்தில் உருவாக்கப்பட்டு வசந்த காலத்தில் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய இணையதளத்தில், இந்தியாவை உள்ளடக்கிய பல கேலரிகளுடன் இந்த செய்திகள் அனைத்தையும் நீங்கள் காணலாம் https://www.fronteversismo.com/india.html
மற்றும் ஜப்பான் செய்திகள் காண https://www.fronteversismo.com/fronteversismo-japan.html
மேலும் மேலே உள்ள இணைய இணைப்பிற்கு கூடுதலாக https://www.giusart.com/fronteversismo/ இல் ஆழ்ந்த பிரதிபலிப்புகள் மற்றும் பரிந்துரைகளுக்கான பல ஆதாரங்களை நீங்கள் காணலாம்.
 

Copyright dipinti e Fronteversismo®:
Giuseppe Siniscalchi 2024
Back to content | Back to main menu